கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாண்டதாக யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டிய பாகிஸ்தான் நாளிதழ்…

கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாண்டதாக யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டிய பாகிஸ்தான் நாளிதழ்…

கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாண்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசை பாகிஸ்தான் நாளிதழ் எதிர்பாராதவிதமாக பாராட்டியுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி தினசரி நாளிதிழ் டவ்னின் செய்தி ஆசிரியர் ஃபஹத் ஹுசைன் தனது டிவிட்டரில் ஒரு கிராப்பை பதிவேற்றம் செய்து அதனை சுட்டிக்காட்டி கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த கிராப்பை கவனமாக பாருங்க. இந்த கிராப் பாகிஸ்தானின் இறப்பு விகிதத்தையும், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் இறப்பு விகிதத்தையும் ஒப்பீடு செய்கிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாண்டதாக யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டிய பாகிஸ்தான் நாளிதழ்…

இரண்டுக்கும் (பாகிஸ்தான், உத்தர பிரதேசம்) ஏறக்குறைய ஒரே மக்கள் தொகை சுயவிவரம் மற்றும் கல்வியறிவு உள்ளது. அதேசமயம் உத்தர பிரதேசத்தை காட்டிலும் பாகிஸ்தானில் மக்கள் அடர்த்தி/கி.மீ. குறைவு மற்றும் அதிக உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் அதிகம். உத்தர பிரதேசம் லாக்டவுனை கடுமையாக பின்பற்றியது. நாம் பின்பற்றவில்லை. இதுதான் கொரோனா வைரஸ் இறப்பு விகித வித்தியாசத்துக்கு காரணம்.

கொரோனா வைரஸ் நெருக்கடியை சரியாக கையாண்டதாக யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டிய பாகிஸ்தான் நாளிதழ்…

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இறப்பு விகிதம் பாகிஸ்தானை காட்டிலும் குறைவு. இளம் மக்கள்தொகை மற்றும் அதிக உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ளபோதிலும் மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் அதிகம். சரியான பாடங்களை கற்றுக்கொள்வதற்கு உத்தர பிரதேச அரசு சரியாக செய்தது என்ன, மகாராஷ்டிரா அரசு செய்த தவறு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என பதிவு செய்துள்ளார்.