தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர்!

 

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர்!

சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டு தின விழா இன்று உலகமெங்கும் வாழும் தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சார்வரி ஆண்டு நிறைவடைந்து பிலவ தமிழ் புத்தாண்டு இன்று தொடங்கி இருப்பதால் மக்கள் காலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.அத்துடன் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்து கடவுளுக்கு படைத்து உறவினர்களுக்கும் கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர்!

இருப்பினும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கொரோனா முடிவுக்கு வராத நிலையில் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .சில கோவில்களில் வழிபாடு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து செய்தியை வெளியிட்டு வருகின்றனர்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர்!

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் , தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும், மனைவி ஜுல்லும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெங்காலி, கம்போடியன், லியோ, மியான் என்றும் பதிவிட்டுள்ளார்.