ட்ரம்பை கிளம்பச் சொல்லும் பைடன்… கோடிக்கணக்கில் முன்கூட்டியே வாக்களிப்பு – அமெரிக்கத் தேர்தல்

 

ட்ரம்பை கிளம்பச் சொல்லும் பைடன்… கோடிக்கணக்கில் முன்கூட்டியே வாக்களிப்பு – அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாளை மறுநாள் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான வாக்குப் பதிவு. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறித்த பேச்சுகள் ஒருபக்கமும், அதிபர் தேர்தல் குறித்து ஒரு பக்கமும் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார்.

ட்ரம்பை கிளம்பச் சொல்லும் பைடன்… கோடிக்கணக்கில் முன்கூட்டியே வாக்களிப்பு – அமெரிக்கத் தேர்தல்

இந்நிலையில் கடைசி கட்ட பிரசாரம் வலுவாக நடந்துகொண்டிருக்கிறது. ‘கடந்த நாலு ஆண்டுகளுகாக வெறுப்பை விதைத்து, நாட்டை பிளவுப்படுத்திய அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’ என்றும் ‘ட்ரம்ப் நீங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்பதாகவும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன்  டெட்ராய்ட் நகரத்தில் பிரசாரம் செய்கையில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரம் செய்த 18 இடங்களில் ஆய்வு செய்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அக்கூட்டங்கள் மூலம் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றாகி, 700 பேர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.

ட்ரம்பை கிளம்பச் சொல்லும் பைடன்… கோடிக்கணக்கில் முன்கூட்டியே வாக்களிப்பு – அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்க சட்டப்படி முன்கூட்டியே வாக்களிக்கலாம். அதன்படி ஏற்கெனவே டொனால்டு ட்ரம்பும் ஜோ பைடனும் வாக்களித்து விட்டனர். அதைபோல அமெரிக்க மக்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். இதுவரை சுமார் 9 கோடி பேர் வாக்களித்து விட்டனராம். இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இதுவரை இல்லைஎன்று சொல்லப்படுகிறது. அதிலும் கொரோனா நோய்த் தொற்று பரவும் இந்தக்காலத்தில் மக்கள் வந்து வாக்களிப்பது ஆச்சர்யம்தான்.