ஒரே நாளில் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சியளிக்கும் அமெரிக்கா

 

ஒரே நாளில் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சியளிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு மற்றும் பொது மக்கள் கொரோனா விழிப்புணர்வோடு செயல்படாவிட்டால் விரைவில் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சியளிக்கும் அமெரிக்காஜூன் மாத தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஜூன் இறுதியில் அது ஒரு நாளைக்கு 42 ஆயிரமாக அதிகரித்தது. நேற்று அங்கு 49,286 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சியளிக்கும் அமெரிக்காஇவர்களில் 50 சதவிகிதம் பேர் அரிசோனா, கலிஃபோர்னியா, ஃபுளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்க மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இந்த நான்கு மாகாணங்களில் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.