அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியல்ல.. அது உத்தரவு… சர்ச்சை கிளப்பும் கவிஞர் முனாவ்வா் ரானா

 

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியல்ல.. அது உத்தரவு… சர்ச்சை கிளப்பும் கவிஞர் முனாவ்வா் ரானா

ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கு பல பத்தாண்டுகளாக ஜவ்வாக இழுத்து கொண்டே வந்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று இந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அந்த அமர்வு ஒரு மனதாக (5-0) வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டி கொள்ளலாம். அதேசமயம் வேறு பகுதியில் மசூதி கட்டி கொள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியல்ல.. அது உத்தரவு… சர்ச்சை கிளப்பும் கவிஞர் முனாவ்வா் ரானா
தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது. மசூதி கட்டவும் 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கி விட்டது. இந்த சூழ்நிலையில், அயோத்தி வழக்கு தீர்ப்பையும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பிரபல உருது கவிஞர் முனாவ்வர் ரானா. அண்மையில் இந்தி தொலைக்காட்சிக்கு முனாவ்வர் ரான அளித்த பேட்டியில், ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியல்லை, அது ஒரு உத்தரவு. ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டது மோசமான சுவை. கோகாய் அயோத்தி தீர்ப்பு வழங்க தன்னையே விற்று விட்டார் கோகாய் என தெரிவித்ததாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும் அவர் பேசியதை வெளியிட முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளை பேசியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியல்ல.. அது உத்தரவு… சர்ச்சை கிளப்பும் கவிஞர் முனாவ்வா் ரானா

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாயை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டார். ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.