கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசர சட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசர சட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

நாடு முழுக்க உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் பெருமளவில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. இந்த வங்கிகளில் முறைகேடு நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு. இதனால், இவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசர சட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!
நாடாளுமன்றம் கூட்டப்படாத நிலையில், கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைக் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் படி அவரச சட்டம் கொண்டுவரப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.