கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கு அபாயம்… தமிழகத்தை அதிரவைக்கும் டேட்டா!

 

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கு அபாயம்… தமிழகத்தை அதிரவைக்கும் டேட்டா!

முதல் அலையைப் போல் அல்லாமல் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் ஆபத்தானது என முன்னரே அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். முந்தையை வரலாற்றில் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற தொற்றின் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் தான் பல கோடி பேர் உயிரை விட்டனர். அந்தளவிற்குக் கொடிய அலையாக இரண்டாம் அலை பார்க்கப்படுகிறது. கொரோனா விஷயத்திலும் அது நிரூபணமாகியிருப்பது சற்றே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கு அபாயம்… தமிழகத்தை அதிரவைக்கும் டேட்டா!

குறிப்பாக பிறந்த குழந்தைகள் முதல் 12 வயதுக்குட்பட்ட வளர்ந்த குழந்தைகள் வரை கொரோனா இரண்டாம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா 2ஆம் அலையால் குழந்தைகளுக்கு அபாயம்… தமிழகத்தை அதிரவைக்கும் டேட்டா!

தமிழகத்திலும் இந்தப் பாதிப்பு இருப்பதைத் தரவுகள் உணர்த்துகின்றன. கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி 132 குழந்தைகளுக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி 319 குழந்தைகளுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பத்து நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே குழந்தைகள் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.