வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை

 

வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடுதல் இல்லாததால், உலகம் முழுவதும், வரும் 2025-ல் கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடப் போகிறது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
உலகில் மூன்றில் ஒருவருக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. 5-ல் ஒருவருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை.தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் தானிய உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது இது வேதனைக்குறிய விஷயமாகும் எனக் கவலை தெரிவிக்கிறது ஐ.நா. சபை.

வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை


உலகம் முழுவதும் தண்ணீரை தேக்கி வைக்க 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. இத்ன மூலம் 26 சதவீத மக்களின் தண்ணீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. அமெரிக்காவில் 6 ஆயிரத்து 675 அணைகள் உள்ளன. இது அங்குள்ள மக்களில் 14 சதவீதம்

வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை

பேரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன, இந்தியாவில் 4 ஆயிரத்து 300 பெரிய அணைகள் உள்ளன. இது 9 சதவீத அளவிற்குதான் தண்ணீர் தேவையை சரி செய்கிறது.விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது.

வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை


தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலங்களால் நமக்கு தண்ணீர் கிடைப்பது தடுக்கப்படுகிறது மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. குளங்கள் வற்றுவதால் விவசாயத்தில் சண்டைகள் முற்றி வருகின்றன. தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கும் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது.புதிய திட்டமிடுதல் இல்லாமல் நிலைமை இப்படியே இருக்குமானால் வரும் 2025-ல் மிக கொடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.