“கனடா டாக்டர்னு சொல்லி கண்டமாக்கிட்டியே..” -கல்யாண வெப்சைட்டால் கண்ணீர் விடும் பெண்

 

“கனடா டாக்டர்னு சொல்லி கண்டமாக்கிட்டியே..” -கல்யாண வெப்சைட்டால் கண்ணீர் விடும் பெண்

திருமண வெப் சைட்டில் தன்னை டாக்டர் என்று கூறி ஒரு பெண்ணிடம் 10 லட்ச ரூபாய் ஏமாற்றிய ஒருவரை  போலீசார் கைது செய்தனர்

“கனடா டாக்டர்னு சொல்லி கண்டமாக்கிட்டியே..” -கல்யாண வெப்சைட்டால் கண்ணீர் விடும் பெண்

உத்தரபிரதேசத்தில் பரேலியில் வசிக்கும் முகமது ஹசிப் என்ற நபர் தலைமையில் ஒரு மோசடி கும்பல் கல்யாண வெப்சைட்டில் சிக்கும் பெண்களிடம் போலி விவரங்களை அளித்து அவர்களை தங்களின் மோசடி வலையில் விழ வைத்து சில பெண்களிடம் பணத்தையும் ,சில பெண்களிடம் கற்பையும் பறித்து வந்துள்ளார்கள் .

அதன் படி அந்த முகமது ஹசிப் என்ற 30 வயதான நபர் ஒரு பிரபலமான திருமண வெப் சைட்டில் தன்னை கனடா நாட்டில் வசிக்கும் ஒரு டாக்டர் என்றும், தான் பல லட்சங்களை சம்பாதிப்பதாகவும் போலியான சுய விவரங்களை அளித்து .ஒரு அழகான வாலிபரின் போட்டோவையும் ப்ரொபைல் பிச்சராக  வைத்துள்ளார் .அதை பார்த்து மயங்கிய ஒரு ஹைதராபாத் பெண் அவரை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார் .அப்போது அந்த ஹாசிப் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். அதை அந்த பெண்  உண்மையென்று நம்பி அவரிடம் பேசி வந்தார். அதன் பிறகு  அந்த ஹைதராபாத் பெண்ணுக்கு தான் ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள  பார்செல் அனுப்பியுள்ளதாக அவர்  கூறினார் .

பின்னர் அந்த பெண்ணை ஒரு பெண் தொடர்பு கொண்டுஅவருக்கு கனடாவிலிருந்து  ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறி அதற்கு டூட்டியாக 10 லட்சம் கட்ட வேண்டும் என்றார் .அதை  நம்பிய அவர் அந்த பெண் சொன்ன அக்கௌண்டுக்கு 10.7 லட்சம் அனுப்பினார் .அதன் பிறகு அந்த பெண் அந்த கனடா மாப்பிளையை தொடர்பு கொள்ள முடியாததால் ,தான் ஏமாற்றப்பட்டதையுணர்ந்த அவர் போலீசில் புகார் கூறினார் .பொலிஸார்  வழக்கு  பதிந்து அந்த மோசடி செய்த  பரேலியைச் சேர்ந்த முகமது ஹசிப்பை கைது செய்தனர்

“கனடா டாக்டர்னு சொல்லி கண்டமாக்கிட்டியே..” -கல்யாண வெப்சைட்டால் கண்ணீர் விடும் பெண்