உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தன் சிங் (42). தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தார். இவரை நேற்று இரவு 9 மணி அளவில் மூன்று பேர் சுட்டுக் கொன்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?

யார் சுட்டார்கள் என்பதை கண்டறிவதற்கு முன்னதாகவே போலீஸ் தரப்பில் இருந்து குடும்ப சொத்து தொடர்பான பிரச்னை காரணமாக ரத்தன் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் சிங் நிலத்தில் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் நபர் சுற்றுச் சுவர் எழுப்பியுள்ளார். மேலும், தன்னுடைய நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் கம்பத்தை நட்டுள்ளார். இதை ரத்தன் சிங் தடுத்துள்ளார். இதன் காரணமாகவே ரத்தன் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?

இந்த குற்றச்சாட்டை ரத்தன் சிங்கின் தந்தை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ரத்தன் சிங்குக்கு எந்தவிதமான சொத்துப் பிரச்னையும் இல்லை. சம்பவ இடத்துக்குச் சென்று நீங்களே அதைக் காணலாம். போலீசார் புதுக்கதையை புனைகிறார்கள்” என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை… சொத்து தகராறு என்று மறைக்க முயற்சிக்கும் போலீஸ்?

அரசியல் காரணங்களுக்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த ரத்தன் சிங் குடும்பத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.10 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த மாதம் உ.பி காசியாபாத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தன் இரு மகள்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.