தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.. சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.. சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கோவிட்-19 தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என்று உத்தர பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் சர்தானா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கீத் சிங் சோம். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வதில் பெயர் பெற்றவர். தற்போது கோவிட்-19 பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.. சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.
சங்கீத் சிங் சோம்

மீரட்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சிங் சோம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவிட்-19 தடுப்பூசியில் பன்றி இறைச்சி பயன்படுத்துவது குறித்து முஸ்லிம் சமுதாயத்தினர் கவலைப்படுவது குறித்து சோமிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சங்கீத் சிங் சோம் பதிலளிக்கையில் கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக சில முஸ்லிம்களுக்கு நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.

தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.. சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.
கோவிட்-19 தடுப்பூசி

பிரதமர் மோடி மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களின் ஆன்மா பாகிஸ்தானுக்கு சொந்தமானது. அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அவர்கள் எங்கள் விஞ்ஞானிகளின் பணிகள் குறித்து சந்தேகம் எழுப்பக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.