ஸ்வீட், கூல் டிரிங்ஸ் பிரச்னை… மணமகளின் 9 வயது தம்பியை கொன்ற மாப்பிள்ளை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

ஸ்வீட், கூல் டிரிங்ஸ் பிரச்னை… மணமகளின் 9 வயது தம்பியை கொன்ற மாப்பிள்ளை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஃபரூக்காபாத்தில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீட்டார் இரவு 8.30 மணிக்கு வந்துள்ளனர் அப்போது மணமகன் வீட்டாருக்கு தின்பண்டங்கள் மற்றும் தண்ணீரை மணமகள் குடும்பத்தினர் அளித்துள்ளனர். ஆனால் மணமகன் மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உணவு பண்டங்கள் சரி இல்லை என்று கூறி மணமகள் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் தாய் மாமா ராம் குமார் என்பவரை சுட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தின்பண்டங்கள் பரிமாறிக் கொண்டிருந்த 9 வயதான மணமகளின் தம்பி பிரன்ஷு என்பவரை அவர்கள் தங்கள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். காரில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் மூன்று பெண்கள் மீது மோதியதாக தெரிகிறது.

ஸ்வீட், கூல் டிரிங்ஸ் பிரச்னை… மணமகளின் 9 வயது தம்பியை கொன்ற மாப்பிள்ளை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

இதையடுத்து மணமகனுக்கு போன் செய்த மணமகள் வீட்டார் பிரன்ஷு உடன் திரும்ப வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அதிகாலை 3 மணியளவில் அவர் பிரன்ஷு உடலை கிராமத்தில் போட்டுவிட்டு மீண்டும் தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் பிரன்ஷு கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின்போது படுகாயமடைந்த விமலா, மித்லேஷ், சப்னா ஆகிய மூவரும் ஃபரூக்காபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மித்லேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீட், கூல் டிரிங்ஸ் பிரச்னை… மணமகளின் 9 வயது தம்பியை கொன்ற மாப்பிள்ளை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

இதுகுறித்து மணமகளின் தந்தை ராம்பால் ஜாதவ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இரு தரப்பு ஆண்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எந்த சண்டையும் போடவில்லை. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட மணமகன் மூன்று பெண்கள் மீது காரை ஏற்றியது தெரியவந்துள்ளது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கான மருத்துவ அறிக்கை வந்த பிறகே சிறுவன் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.