கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

 

கையாலாகாத அரசு காவல்துறை மூலம்  மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து திமுகவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

கையாலாகாத அரசு காவல்துறை மூலம்  மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், உள்ளிட்ட பல்வேறு பொய் வாக்குறுதிகள் அளித்து வெற்றி பெற்று, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்தலைவர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க கோவை சுண்டக்காமுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கையாலாகாத அரசு காவல்துறை மூலம்  மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ். பி. வேலுமணி, எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இருக்கிறது இந்த அரசு. திமுக அரசு அமைந்த பின்னர் தான் ஒவ்வொரு ஊரிலும் 50, 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் இறப்பு எண்ணிக்கையை குறைத்து வேறு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். இது போன்ற செயல்களை செய்ய விடாமல் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதும், காவல்துறையின் மூலம் மிரட்டுவதும் என்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது கையாலாகாத அரசு.

கையாலாகாத அரசு காவல்துறை மூலம்  மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

காவல்துறையின் மிரட்டலுக்கு ஒன்றும் அதிமுகவினர் பயப்பட மாட்டோம். ஆனாலும் காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்திருக்கிறது . ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தது. ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் வேலுமணி.