தங்க கடத்தல் வழக்கு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. பா.ஜ.க. கோரிக்கை

தங்க கடத்தல் வழக்கு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. பா.ஜ.க. கோரிக்கை

தூதரக வழிமுறையில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் இது கேள்விபடாத சம்பவம். குறிப்பாக கேரளாவுக்கு. தூதரக வழிகளை தவறாக பயன்படுத்தி தங்க கடத்தலில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். கடத்தல் என்பது தேச விரோத செயல், அது பொருளாதாரத்தை சீர்குலைக்கும்.

தங்க கடத்தல் வழக்கு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. பா.ஜ.க. கோரிக்கை

தங்க கடத்திலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு தீவிரமானது. இது பொருளாதார பயங்கரவாதத்தில் ஒன்றாக இருப்பதற்கு ஒப்பானது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கேரள முதல்வரின் தலைமை செயலாளருக்கு இந்த கடத்தல் வழக்கில் நெருக்கமான தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தங்க கடத்தல் வழக்கு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. பா.ஜ.க. கோரிக்கை

இதற்கான ஆதாரங்கள் வெளிவந்தபோதிலும், இந்த கடத்தல் நடவடிக்கைகளில் அவருக்கும், அவரது அலுவலகத்துக்கும் எந்த பங்கும், அறிவும் இல்லை என்று முதலமைச்சர் இன்னும் பாசாங்கு செய்கிறார். இந்த செயல்களுக்கு முதலமைச்சர் தார்மீக பொறுப்பை ஏற்கவேண்டும், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே, கேரள முதல்வர் பதவி விலக்கோரி பா.ஜ.க. நேற்றுமுன்தினம் 18 நாள் சத்தியாகிரகத்தை பா.ஜ.க. ஆரம்பித்துள்ளது.