தடுப்பூசி கிடைக்கவில்லையென்றால் எங்களை தூக்கிலிட வேண்டுமா?.. மத்திய அமைச்சர் கேள்வி

தடுப்பூசி கிடைக்கவில்லையென்றால் எங்களை தூக்கிலிட வேண்டுமா?.. மத்திய அமைச்சர் கேள்வி

தடுப்பூசி கிடைக்கவில்லையென்றால் எங்களை தூக்கிலிட வேண்டுமா? என்று மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கேள்வி எழுப்பினார்.

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்தா கவுடா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கேள்விக்கு அமைச்சர் சதானந்தா கவுடா கூறியதாவது: நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நீதிமன்றம் நல்ல நோக்கத்தில் கூறியுள்ளது.

தடுப்பூசி கிடைக்கவில்லையென்றால் எங்களை தூக்கிலிட வேண்டுமா?.. மத்திய அமைச்சர் கேள்வி
கோவிட்-19 தடுப்பூசி

நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், நாளை நீங்கள் (மத்திய அரசு) இவ்வளவு (தடுப்பூசி) கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கிறது என்று வைத்து கொள்வோம். அந்த அளவுக்கு இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றால் நாங்கள் தூக்கிலிட வேண்டுமா?. மத்திய அரசின் முடிவுகள் எந்தவொரு அரசியல் ஆதாயத்தினாலும் அல்லது வேறு எந்த காரணத்தினாலும் வழிநடத்தப்படுவதில்லை.

தடுப்பூசி கிடைக்கவில்லையென்றால் எங்களை தூக்கிலிட வேண்டுமா?.. மத்திய அமைச்சர் கேள்வி
மத்திய அரசு

அரசாங்கம் தனது பணியை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்து வருகிறது. அந்த நேரத்தில் சில குறைபாடுகள் தோன்றியுள்ளன. நடைமுறையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை, அவற்றை நம்மால் நிர்வகிக்க முடியுமா? இருப்பினும், ஓரிரு நாட்களில் விஷயங்கள் மேம்படுவதையும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதையும் உறுதி செய்ய அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.