யோகி ஆதித்யநாத்தை பதவி விலக சொல்ல மாயாவதிக்கு உரிமை கிடையாது.. சாடிய ராம்தாஸ் அதவாலே

யோகி ஆதித்யநாத்தை பதவி விலக சொல்ல மாயாவதிக்கு உரிமை கிடையாது.. சாடிய ராம்தாஸ் அதவாலே

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி விலக சொல்ல மாயாவதிக்கு எந்த உரிமையும் கிடையாது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லையென்றால் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும், உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்து இருந்தார். மாயாவதியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதிலடி கொடுத்துள்ளார். லக்னோவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

யோகி ஆதித்யநாத்தை பதவி விலக சொல்ல மாயாவதிக்கு உரிமை கிடையாது.. சாடிய ராம்தாஸ் அதவாலே
மாயாவதி

ஹத்ராஸ் சம்பவம் மனிதகுலத்தின் மீது ஒரு கறை. குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாயாவதி அரசியல் செய்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி விலகக் கோருவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்தை பதவி விலக சொல்ல மாயாவதிக்கு உரிமை கிடையாது.. சாடிய ராம்தாஸ் அதவாலே
ஸ்மிருதி இரானி

ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் ஹத்ராஸ் வருகை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், காங்கிரஸின் தந்திரங்களை மக்கள் அறிவார்கள். அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அவர்கள் உறுதி செய்தனர். ஹத்ராஸூக்கு அவர்கள் (ராகுல், பிரியங்கா காந்தி வருகை தருவது அவர்களின் அரசியலுக்காகவே மட்டுமே தவிர பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.