வேளாண் சட்டங்களை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும்.. இல்லையெனில் அரசு கவிழும்.. ராம்தாஸ் அதவாலே

வேளாண் சட்டங்களை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும்.. இல்லையெனில் அரசு கவிழும்.. ராம்தாஸ் அதவாலே

மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் இல்லையென்றால் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதா வரும் நாட்களில் விவசாயிகளுக்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக பயனளிக்கும். காங்கிரசும், பிற கட்சிகளும் தங்களது கட்சி தொண்டர்களின் உதவியுடன் விவசாயிகளை தூண்டிவிடுகின்றன. பொதுவான விவசாயிகள் அரசாங்கத்துடன் உள்ளனர்.

வேளாண் சட்டங்களை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும்.. இல்லையெனில் அரசு கவிழும்.. ராம்தாஸ் அதவாலே
ராம்தாஸ் அதவாலே

சிவ சேனாவும், சிரோன்மணி அகாலி தளமும் தேசிய ஜனநாயக கூட்டணி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டன. ஆனால் அவர்களால் மீண்டும் கூட்டணியில் வர முடியும். மகாராஷ்டிராவிலும் வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் கவிழும். 25 ஆண்டு கால நட்பை பார்த்த சிவ சேனா மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்ப வேண்டும்.

வேளாண் சட்டங்களை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும்.. இல்லையெனில் அரசு கவிழும்.. ராம்தாஸ் அதவாலே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் உத்தவ் தாக்கரேவை முறையாக பணியாற்ற விடாது. மேலும், எந்தவொரு முக்கியமான முடிவுகளையும் எடுக்கவிடாது. தற்போது சிவ சேனா பெவிலியனுக்கு திரும்ப வர வேண்டும் என நான் சொல்கிறேன். நாங்கள் மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைப்போம். ஒன்றாக வருவது சிவ சேனா மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.