காய்கறி விற்கும் விளையாட்டு வீரர்களின் தந்தை – மத்திய அமைச்சர் ரூ 5 லட்சம் உதவி

காய்கறி விற்கும் விளையாட்டு வீரர்களின்  தந்தை – மத்திய அமைச்சர் ரூ 5 லட்சம் உதவி

கொரோனா பேரிடர் எல்லா மட்டங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கானவர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 77,22,746 பேரும், இந்தியாவில் 67,57,131 பேரும், பிரேசில் நாட்டில் 49,70,953 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் தேசிய அளவில் விருதுகள் பெற்ற வீரர்களின் தந்தையும் இந்தக் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிகரம் நீட்டியிருக்கிறது மத்திய அரசு.

காய்கறி விற்கும் விளையாட்டு வீரர்களின்  தந்தை – மத்திய அமைச்சர் ரூ 5 லட்சம் உதவி

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் சுனில் சவுகான். அவரின் சகோதரர் வில்வித்தை வீரர் நீரஜ் சவுகான். வில்வித்தை வீரரான நீரஜ் சவுகான், 2018 ல் நடந்த சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் 50 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுனில் சவுகான், 2020 கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டில் குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

காய்கறி விற்கும் விளையாட்டு வீரர்களின்  தந்தை – மத்திய அமைச்சர் ரூ 5 லட்சம் உதவி

கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால் இவர்களது தந்தை வேலையை இழந்து காய்கறி விற்க நேர்ந்தது. இவர்களுக்கு உதவ விளையாட்டு துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. இந்தச் சகோதரர்களுக்கு, பண்டித தீனதயாள உபாத்தியாயா தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தை வழங்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உத்தரவிட்டுள்ளார்.