திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்கு வன்முறையை நிகழ்த்த முயற்சி.. முக்தர் அப்பாஸ் நக்வி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்கு வன்முறையை நிகழ்த்த முயற்சி.. முக்தர் அப்பாஸ் நக்வி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்கு வன்முறையை மீண்டும் நிகழ்த்த முயற்சி செய்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டினார்.

ராஜ்யசபாவில் கடந்த புதன்கிழமையன்று திரிணாமுல் எம்பிக்கள் ஆறு பேர் பெகாசஸ் தொடர்பாக நோட்டீஸ்களை காண்பித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை இருக்கைக்குச் செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டோலா சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசாங் நூ ஆகிய ஆறு பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்கு வன்முறையை நிகழ்த்த முயற்சி.. முக்தர் அப்பாஸ் நக்வி
அர்பிதா கோஷ்

இதனை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவரான அர்பிதா கோஷ், தனது மொபைல் போனால் ராஜ்யசபாவின் மரக் கதவின் கண்ணாடி உடைத்து நாடாளுமன்றத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றபோது, நாடாளுமன்ற பாதுகாப்பு சேவைகள் (பி.எஸ்.எஸ்.) அதிகாரி லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்குவங்கத்தில் நடத்திய வன்முறையை மீண்டும் செய்ய முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மேற்கு வன்முறையை நிகழ்த்த முயற்சி.. முக்தர் அப்பாஸ் நக்வி
திரிணாமுல் காங்கிரஸ்

இது தொடர்பாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்) நாடாளுமன்றத்தை தங்கள் வன்முறை மரவு மூலம் களங்கப்படுத்த சதி செய்கிறார்கள். அவர்கள் மேற்கு வங்க வன்முறையை நாடாளுமன்றத்தில் மீண்டும் செய்ய முயற்சி செய்கிறார்கள். இது போன்ற எம்.பி.க்களின் உறுப்பினர் தகுதியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சரியான வழக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.