வரும் ஜனவரியில்…. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருது…. மத்திய அமைச்சர் தகவல்

 

வரும் ஜனவரியில்…. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருது…. மத்திய அமைச்சர் தகவல்

வரும் ஜனவரியில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று தனிப்பட்ட முறையில் உணருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பைசா ஆகிய 3 கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு மருந்து நிறுவனங்கள், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுளரான இந்திய மருந்துகள் கட்டுபாட்டாளர் ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ.) தீவிர பரிசீலனையில் உள்ளன.

வரும் ஜனவரியில்…. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருது…. மத்திய அமைச்சர் தகவல்
ஹர்ஷ் வர்தன்

இந்த சூழ்நிலையில் வரும் ஜனவரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டு வரும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோவிட்-19 தடுப்பூசி மற்றும் ஆய்வில் நம் நாடு எந்தவொரு நாட்டையும் விட நாம் குறைவாக இல்லை. எங்களது முதல் முன்னுரிமை தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன்தான். நாம் அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளவிரும்பவில்லை.நமது கட்டுபாட்டாளர்கள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

வரும் ஜனவரியில்…. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருது…. மத்திய அமைச்சர் தகவல்
கோவிட்-19 தடுப்பூசி

வரும் ஜனவரில் எந்தவொரு நிலையிலும் அல்லது எந்த வாரத்திலும், இந்திய மக்களுக்கு முதல் கோவிட் தடுப்பூசி போடும் நிலையில் நாம் இருக்க முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வருகிறது, தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் விரைவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.