கேரளாவுக்கு இடது, காங்கிரஸ் பாம்புகள் தேவையில்லை.. இது வளர்ச்சிக்கான நேரம்.. மத்திய அமைச்சர்

கேரளாவுக்கு இடது, காங்கிரஸ் பாம்புகள் தேவையில்லை.. இது வளர்ச்சிக்கான நேரம்.. மத்திய அமைச்சர்

கேரளாவுக்கு இடது (எல்.டி.எப்), காங்கிரஸ் (யூ.டி.எப்.) பாம்புகள் தேவையில்லை, இது வளர்ச்சிக்கான நேரம் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கணிசமான தொகுதிகளை வெல்ல கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசிய தலைவர் கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

கேரளாவுக்கு இடது, காங்கிரஸ் பாம்புகள் தேவையில்லை.. இது வளர்ச்சிக்கான நேரம்.. மத்திய அமைச்சர்
இடதுசாரி-காங்கிரஸ்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடவுளின் தேசத்தில் தாமரை மலர செய்வதற்காக பிரசாரம் செய்து வருகிறார். கொச்சியில் கிரிராஜ் சிங் பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில், அரசாங்கத்தை நடத்த பா.ஜ.க.வை தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிகளுடன் அவர்கள் சோர்ந்து போய் விட்டனர்.

கேரளாவுக்கு இடது, காங்கிரஸ் பாம்புகள் தேவையில்லை.. இது வளர்ச்சிக்கான நேரம்.. மத்திய அமைச்சர்
ஸ்ரீதரன்

கேரளாவில் ஆட்சிக்கு ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று கோப்ரா, மற்றொன்று சின்ன பாம்பு. இரண்டு பாம்புகளும் கேரளாவுக்கு தேவையில்லை. இது வளர்ச்சிக்கான நேரம். வளர்ச்சியின் சின்னமான இ.ஸ்ரீதரன், இரண்டு முன்னணிகளாலும் சரிந்த பலாரிவட்டம் மேம்பாலத்தை சரிசெய்து கட்டினார். கேரளாவின் பொது கடன் ரூ.3 லட்சம் கோடியாகும். இரண்டு முன்னணிகளின் ஊழல் காரணமாக ஐ.பி.எஸ். அதிகாரி ஜாக்கப் தாமஸ் பா.ஜ.க.வில் இணைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.