மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் என அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் மத்திய எஃகு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இரண்டாவதாக ஒரு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதியானது.