லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்திய மத்திய அரசு… ஊரடங்கை தளர்த்த மறுக்கும் மகாராஷ்டிரா..

லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்திய மத்திய அரசு… ஊரடங்கை தளர்த்த மறுக்கும் மகாராஷ்டிரா..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் மே முதல் லாக்டவுனை விதிமுறைகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. அன்லாக் 2.0 விதிமுறைகள் நாளையுடன் முடிவடைய உள்ளதால், நேற்று அன்லாக் 3.0 விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அன்லாக் 3.0 விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்திய மத்திய அரசு… ஊரடங்கை தளர்த்த மறுக்கும் மகாராஷ்டிரா..

வரும் 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. ஜிம்கள், யோக மையங்கள் ஆகியவை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம். ஆனால் மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அசெம்ப்ளி ஹால் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு,கல்வி, கலாச்சாரம், மத நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அடுத்த மாதம் இறுதிவரை பள்ளி, கல்லூரிகளை திறக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்திய மத்திய அரசு… ஊரடங்கை தளர்த்த மறுக்கும் மகாராஷ்டிரா..

மத்திய அரசு லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியுள்ள அதேவேளையில், மகாராஷ்டிரா அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் லாக்டவுனை நீட்டிக்கும் முடிவை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள், உணவகங்கள், புட்கோர்ட் இல்லாத மால்கள் மற்றும் வணிக வளாகங்களை ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.