வீடு வீடாக சென்ற அமித் ஷா… குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

 

வீடு வீடாக சென்ற அமித் ஷா…  குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

பொன். ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா.

வீடு வீடாக சென்ற அமித் ஷா…  குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. அத்துடன் தீவிர
தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. திமுக திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அமித் ஷா இன்று குமரியில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க இன்று நாகர்கோவில் வந்துள்ளார்.

வீடு வீடாக சென்ற அமித் ஷா…  குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித் ஷா வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார்,வெற்றிக் கொடி ஏந்தி செல்வோம் என்ற பரப்புரையை தொடங்கி வைத்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கினார். குமரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித் ஷா பரப்புரை மேற்கொண்டுள்ளார்.இதை தொடர்ந்து பேரணியில் பங்கேற்கும் அமித்ஷா, வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் பிற்பகலில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.கடந்த மக்களவை தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் சொந்த தொகுதியான குமரியில் நின்று தோல்வியடைந்தார். இந்த முறையும் அவரையே நிறுத்தும் பாஜக, அமித்ஷாவின் வியூகங்களுடன் பரப்புரையை தொடங்கியுள்ளது. இந்த முறை பாஜகவின் திட்டம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.