தடுப்பூசி பற்றாக்குறை.. தோல்விகளை மறைக்க இழிவான முயற்சிகள்.. மகாராஷ்டிரா அரசை சாடிய ஹர்ஷ் வர்தன்

 

தடுப்பூசி பற்றாக்குறை.. தோல்விகளை மறைக்க இழிவான முயற்சிகள்.. மகாராஷ்டிரா அரசை சாடிய ஹர்ஷ் வர்தன்

தடுப்பூசி பற்றாக்குறை என தவறான தகவலை பரப்புவது, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் தங்களது தோல்விகளை மறைக்க மேற்கொள்ளும் இழிவான முயற்சிகள் என்று மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் அரசுகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குற்றம் சாட்டினார்.

நம் நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை உருவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறைக்கு சிவ சேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி எழுதிய கடிதத்தில், கோவிட்-19 தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அணுகும்படி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

தடுப்பூசி பற்றாக்குறை.. தோல்விகளை மறைக்க இழிவான முயற்சிகள்.. மகாராஷ்டிரா அரசை சாடிய ஹர்ஷ் வர்தன்
பிரியங்கா சதுர்வேதி

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: இது தொற்றுநோயை பரவுவதை கட்டுப்படுத்துவதில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி தவிர வேறில்லை. மகாராஷ்டிரா அரசு பொறுப்புடன் செயல்பட இயலாமை என்பது புரிதலுக்கு அப்பால் உள்ளது. மக்களிடையே பீதியை பரப்புவது முட்டாள்தனத்தை மேலும் அதிகரிப்பதாகும். தடுப்பூசி சப்ளையை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன. இது குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன.

தடுப்பூசி பற்றாக்குறை.. தோல்விகளை மறைக்க இழிவான முயற்சிகள்.. மகாராஷ்டிரா அரசை சாடிய ஹர்ஷ் வர்தன்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் சாதாரண அணுகுறையை நான் கண்டேன். இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் பிரஹன்மும்பை மாநகராட்சி கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தாங்கள் தனிமைப்படுத்தலை தவிர்த்து வருவதாக மிட்-டே அளித்துள்ள விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டி பேசினார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்களையும், பீதியையும் பரப்புவதை கொண்ட சத்தீஸ்கர் தலைவர்களின் கருத்துக்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அற்ப அரசியல் செய்வதற்கு பதிலாக தங்களது மாநிலத்தின் சுகாதாரா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மாநில தனது ஆற்றல்களை மையப்படுத்தினால் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.