திமுக எம்.பி டி.ஆர்.பாலு அளித்த மனு… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

 

திமுக எம்.பி டி.ஆர்.பாலு அளித்த மனு… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவை 650 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவில் 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் எம்.பி டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்திருந்தார்.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு அளித்த மனு… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

பிற மாநிலங்களில் தற்போது பாதிப்பு குறைந்து இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு வழங்கும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு விநியோகம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். டி.ஆர்.பாலு அளித்த தமிழக அரசின் மனுவை உடனடியாக பரிசீலித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்திற்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கூடுதலாக விநியோகம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு அளித்த மனு… உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அரசு!

இதனிடையே, மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது தலைமையில் 4 பேர் கொண்ட இணைப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அக்குழு ஆக்சிஜன் விநியோகத்தை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 29 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கோவை மதுக்கரை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசு உத்தரவிட்ட 900 மெட்ரிக் டன் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.