அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்… அனுமதி கொடுத்து விட்டதா மத்திய அரசு?

 

அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்… அனுமதி கொடுத்து விட்டதா மத்திய அரசு?

நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரோனா பரவல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு சில நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. பாதிப்பு கட்டுக்குள் வந்து முழுமையாக இயல்பு நிலை திரும்பய பிறகே, விமான சேவை மீண்டும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல ரஜினிகாந்த் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்… அனுமதி கொடுத்து விட்டதா மத்திய அரசு?

இரண்டு சிறுநீரகங்களையும் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி, உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் ரஜினியின் கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு தனி விமானத்தில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லும் ரஜினிகாந்த் 14 நாட்கள் அங்கு தங்கியிருந்து உடல் பரிசோதனைக்கு பிறகு சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகு மீண்டும் அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.