அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

 

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது என்றே சொல்ல வேண்டும். முதல் அலையின் போது, அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 98 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. ஆனால், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை எட்டி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இன்றைய நிலவரப்படி 1,61,736 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 879 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 97,168 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். புதிதாக பதிவாகி இருக்கும் பாதிப்பில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் தான் அதிகமாக இருக்கிறது. அதனால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதே போல, அம்மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை அதிகமாக விநியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இது தொடர்பாக பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். இக்கூட்டத்தின் முடிவில் முக்கியத் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.