விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை : மீண்டும் தோல்வியை தழுவிய மத்திய அரசு!

 

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை : மீண்டும் தோல்வியை தழுவிய மத்திய அரசு!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதியில் இருந்து டெல்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு கையிலெடுத்த எந்த நடவடிக்கையும், விவசாயிகளிடம் எடுபடவில்லை. இந்த போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு முயற்சி செய்யாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை : மீண்டும் தோல்வியை தழுவிய மத்திய அரசு!

அதோடு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தனர். அந்த குழுவின் பரிந்துரையின் பேரில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தும், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. போராட்டத்தை நிறுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் தோல்வியிலேன் முடிவடைகிறது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை : மீண்டும் தோல்வியை தழுவிய மத்திய அரசு!

இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் நடத்திய 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதை ஏற்க மறுத்த விவசாயிகள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என அறிவித்தனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.