இன்னும் 64 நாட்களில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விடுவோம்… மத்திய அமைச்சர் தகவல்

 

இன்னும் 64 நாட்களில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விடுவோம்… மத்திய அமைச்சர் தகவல்

ஏர்இந்தியாவை இன்னும் 64 நாட்களில் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை முடிந்து விடும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் நல்ல லாபத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு மேலும் ஏர் இந்தியாவை அரசு நடத்தினால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும் என்று உணர்ந்த மத்திய அரசு அதனை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.

இன்னும் 64 நாட்களில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விடுவோம்… மத்திய அமைச்சர் தகவல்
ஹர்தீப் சிங் பூரி

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. கொரோனா காரணமாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தாமதமானது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்துக்குள் ஏர் இந்தியா தனியார்மயமாகிவிடும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: ஏர் இந்தியா பங்கு விற்பனையில் பல ஏலதாரர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் 64 நாட்களில் (ஜூன் இறுதிக்குள்) நிதி ஏலத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவுக்கு இன்னும் ரூ.60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அதன் பொறுப்பு விற்பனை செய்யப்படும்.

இன்னும் 64 நாட்களில் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விடுவோம்… மத்திய அமைச்சர் தகவல்
ஏர் இந்தியா

பவான் ஹென்ஸ் உள்ளிட்ட இதர பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடவடிக்கையும் செயலில் உள்ளது. இந்த மாத இறுதி முதல் 100 சதவீத திறனுடன் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது ஆனால் கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக அது தாமதம் ஆகிறது. விமானபோக்குவரத்து அமைச்சகம் நாட்டிலுள்ள 2-3 டயர் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை லாபகமராக மாற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் கோரக்புர் விமான நிலையம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியத்நாத் இன்று கோரக்புர் விமானநிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.