கள்ளக்குறிச்சி இளைஞரை காவு வாங்கிய கட்டி முடிக்கப்படாத ரயில்வே மேம்பாலம்

 

கள்ளக்குறிச்சி இளைஞரை காவு வாங்கிய கட்டி முடிக்கப்படாத ரயில்வே மேம்பாலம்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் வாகனத்தில் பயணித்த இளைஞர் உயரத்தில் இருந்து விழுந்து  இறந்தார்.

கள்ளக்குறிச்சி இளைஞரை காவு வாங்கிய கட்டி முடிக்கப்படாத ரயில்வே மேம்பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது வெளக்கூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் ஏழுமலை(32). பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர்களின் குடும்ப விழா ஒன்றில் பங்கேற்க சனிக்கிழமை  நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரின் இருசக்கரத்தை வாகனத்தைப் பெற்றுக் கொண்டு அதில் சொந்த ஊரை நோக்கி கிளம்பியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அதியமாகோட்டை பகுதியை நெருங்கியுள்ளார். அங்கு, ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்துக்கு முன்னதாக உள்ள சாலை, உள்ளூர் பகுதி மக்களின் தேவைக்காக ஆங்காங்கே அடைக்கப்பட்டு சிறுசிறு திறப்புகள் விடப்பட்டிருந்தது. இதையறியாமல் பாலத்தில் பயணித்த இளைஞர், திடீரென பாலத்தின் கட்டுமானம் முடிவடைந்திருந்த இடத்தில் சுதாரிக்க முடியவில்லை. வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 30 அடி உயரத்தில் இருந்து வாகனத்துடன் விழுந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி இளைஞரை காவு வாங்கிய கட்டி முடிக்கப்படாத ரயில்வே மேம்பாலம்

பால கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் போக்குவரத்து வேறு சாலையில் மாற்றி விடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் தேவைக்காக பாலத்தை நோக்கி செல்லும் சாலையில் தடுப்புகளுக்கு இடையே திறப்புகள் இருந்தது. ஆனால், பாலத்தின் மீது நுழையும் பகுதியில் இரவில் வருபவர்களை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் தன்மை கொண்ட அறிவிப்பு பலகைகள் அல்லது எச்சரிக்கை மின் விளக்குகள் போன்றவற்றை அமைத்திருந்தால் விபத்தில் இளைஞர் இறந்திருக்க மாட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.- அரவிந்த்