நான் ரெடி… நீங்க ரெடியா? : மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலகல பேச்சு!

 

நான் ரெடி… நீங்க ரெடியா? : மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலகல பேச்சு!

திமுக ஆட்சியில் பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் ரெடி… நீங்க ரெடியா? : மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலகல பேச்சு!

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் சபை கூட்டத்தை தமிழக கிராமங்களில் நடத்தி வருகிறார். அங்குள்ள மக்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் குறைகள், திமுக ஆட்சி காலத்தில் செய்து தந்த திட்டங்கள் குறித்து உரையாடி வருகிறார்.

நான் ரெடி… நீங்க ரெடியா? : மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலகல பேச்சு!

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அவளிவநல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார் ஸ்டாலின். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், “தமிழகத்தில் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம்… நாங்க ரெடி… நீங்க ரெடியா? திமுக ஆட்சியில் பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1988 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது; மகளிர் சுய உதவிக்குழு தலைவராக இருந்தபோது அனைவருக்கும் கடன் வழங்கினேன்! ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கின்றனர்” என்றார்.