டிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு!

 

டிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு!

டிஆர்எஸ் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தோனி தான். டிஆர்எஸ் என்றால் அவர்களுக்கு தோனி ரிவியூ சிஸ்டம் தான். அந்த அளவுக்குத் திறமையாக துல்லியமாகக் கணித்து ரிவியூ எடுப்பதில் அவருக்கு நிகர் அவரே. ஆனால் தோனிக்கு கிரிக்கெட்டின் பிடிக்காத விதிகளில் ஒன்று டிஆர்எஸ் மட்டுமே. இது உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கலாம் ஆனால் அது தான் உண்மை. டிஜிட்டல் தொழில்நுட்பம் முற்றிலும் 100 சதவீத ஆதாரத்தை அளிக்காது என்பதே அவரின் வாதம்.

டிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு!

அவரின் வாதம் சரியான ஒன்றே. தொழில்நுட்பம் மேம்பட்ட நிலையில் இன்றளவும் சாப்ட் சிக்னல்களில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் முடிவுகளில் மாற்றம் உண்டாகிறது. அவர் கேப்டனான காலக்கட்டத்தில் இது இன்னும் மோசமாக இருந்தது. அதனால் தான் டிஆர்எஸ் விதிமுறையை அவர் விரும்பவில்லை. டிஆர்எஸ் என்பது அம்பயரின் முடிவை மறுஆய்வு செய்வது. இதில் பல அம்சங்கள் இருந்தாலும் சர்ச்சைக்குள்ளாவது என்னவோ அம்பயர்ஸ் கால் அம்சமே.

டிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு!

எல்பிடபிள்யூக்காகவே இந்த அம்சம் பயன்படுத்தப்படும். எல்பிடபிள்யூவின்போது பந்து ஃபிட்ச்சில் குத்தி முழுவதுமாக ஸ்டம்பை தாக்கினால் அவுட் கொடுக்கப்படும். அதுவே பந்து ஸ்டம்பை உரசிச் சென்றாலோ அல்லது அரைப் பந்து ஸ்டம்புக்குள்ளும் பாதி ஸ்டம்புக்கு மேலும் இருந்தாலோ அது அம்பயர்ஸ் காலுக்குச் செல்லும். அதாவது அம்பயர் அவுட் கொடுத்தால் அவுட். நாட் அவுட் என்றால் நாட் அவுட். இந்த விதியால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைக்கக் கூடியதாக அமைந்ததால் பல்வேறு வீரர்களும் இந்த விதிமுறையின் மீது குற்றச்சாட்டு எழுப்பினர்.

டிஆர்எஸ் விதியை மொத்தமாக தூக்க ஐசிசி முடிவு!

அம்பயர் முடிவே கடைசியானது என்றால் எதற்கு டிஆர்எஸ் என்ற எதிர்கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்தச் சர்ச்சைக்கு முழுவதுமாக முடிவுகட்ட ஐசிசி முடிவுசெய்துள்ளது. இன்று நடைபெற்ற எம்சிசி ஆலோசனைக் கூட்டத்தில் அம்பயர்ஸ் கால் விதிமுறைக்கு எதிராக உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனை விதிகளிலிருந்து நீக்கும் முடிவு குறித்து பரீசிலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே விரைவில் அம்பயர்ஸ் கால் விதிமுறை கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.