கோவிஷீல்டை தடுப்பூசியாக ஏற்றுக்கொண்டது பிரிட்டன்… இனி இந்தியர்கள் தாரளமாக செல்லலாம் ஆனா ஒரு கன்டிஷன்?

கோவிஷீல்டை தடுப்பூசியாக ஏற்றுக்கொண்டது பிரிட்டன்… இனி இந்தியர்கள் தாரளமாக செல்லலாம் ஆனா ஒரு கன்டிஷன்?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எக்ஸ்ட்ரா பாஸ்போர்ட்டாகவே மாறியிருக்கிறது. பாஸ்போர்ட்டுடன் இதனையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் போடப்படும் கோவாக்சின், கோவிஷீல்டை ஒருசில நாடுகள் அங்கீகரிக்கமால் இருப்பதே அதற்குக் காரணம். கோவிஷீல்டை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்து விட்டதால் பெரும்பாலான நாடுகளில் அது ஏற்கப்படுகிறது. கோவாக்சின் போட்டுக்கொண்டவர்களின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது.

கோவிஷீல்டை தடுப்பூசியாக ஏற்றுக்கொண்டது பிரிட்டன்… இனி இந்தியர்கள் தாரளமாக செல்லலாம் ஆனா ஒரு கன்டிஷன்?
கோவிஷீல்டை தடுப்பூசியாக ஏற்றுக்கொண்டது பிரிட்டன்… இனி இந்தியர்கள் தாரளமாக செல்லலாம் ஆனா ஒரு கன்டிஷன்?

ஆனால் பிரிட்டன் அரசோ கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக ஏற்றுக்கொள்ளவில்லை. கோவிஷில்டின் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருந்தாலும் இந்தியர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 2 முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இது இந்திய அரசை கோபம் கொள்ளச் செய்தது. இனவெறியுடன் இவ்வாறு நடந்துகொள்வதாக எதிர்க்கட்சியான காங்கிரஸும் குற்றஞ்சாட்டியது.

கோவிஷீல்டை தடுப்பூசியாக ஏற்றுக்கொண்டது பிரிட்டன்… இனி இந்தியர்கள் தாரளமாக செல்லலாம் ஆனா ஒரு கன்டிஷன்?

இதுதொடர்பாக அந்நாட்டு அரசுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து விளக்கமதித்த பிரிட்டன், கோவின் இணையதளம் மூலம் போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்துதல் விதியிலிருந்து விலக்கு பெற இந்தியர்களில் சிலர் முயற்சி செய்வதால், அதை தடுக்கவே இவ்வாறு தனிமைப்படுத்துகிறோம் என்றனர். ஆனால் சான்றிதழில் உள்ள QR Code கொண்டு போலிகளைக் கண்டுபிடிக்கலாம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்குப் பின் கோவிஷீல்டை பிரிட்டன் அங்கீகரித்திருக்கிறது.
ஆனால் கோவின் சான்றிதழை அங்கீகரிக்கவில்லை. ஆகவே இந்தியர்கள் தனிமைப்படுத்தபடுவதில் எந்த மாற்றமும் இல்லை. இது இந்தியாவுக்கு வெற்றிக்கரமான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நோக்கம் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தனிமைப்படுத்தல் விதியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதே. ஆனால் அதனை பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை. ஆகவே கோவின் தளத்தைச் சீரமைக்க வேண்டிய கடமை இந்தியாவிடம் தான் உள்ளது.