மாணவர்களே உஷார்… இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழங்கள் – யுஜிசி எச்சரிக்கை!

 

மாணவர்களே உஷார்… இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழங்கள் – யுஜிசி எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இந்தப் பதிலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் பேசுகையில், “மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடமும் மின்னணு, அச்சு ஊடகங்கள் வாயிலாகவும் வந்த புகார்களின்படி நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை பல்கலைக்கழக மானியக்குழு கண்டறிந்துள்ளது.

மாணவர்களே உஷார்… இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழங்கள் – யுஜிசி எச்சரிக்கை!

மானியக்குழுவின் விதிகளுக்குப் புறம்பாக இயங்கிவரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாகச் செயல்படுகின்றன. அவற்றுக்கு மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை. போலி பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் அதிக பல்கலைக்கழகங்கள் உள்ளன.

Dharmendra Pradhan - Wikipedia

மொத்தமாக 8 பல்கலைக்கழகங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் என மொத்தமாக 24 பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன். இவை குறித்து தேசிய அளவிலான ஆங்கில மற்றும் இந்தி நாளிதழ்களில் மானியக்குழு சார்பில் எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி பல்கலைக்கழகங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.