இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார்…. தமிழக அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்

 

இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார்…. தமிழக அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தகவலை உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். கொரோனா மரணங்கள் மற்றும் பரிசோதனைகளை அரசு மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து அரசு தரப்பில் வழங்கப்படும் அறிக்கைகளில் திருப்தியில்லை இல்லை, தகவல்களில் உண்மை இல்லை. நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் தகவல்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளை சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், “இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதைபோல ‘கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தருகிறோம்’ என எடுபிடி அரசு பொய்சொல்லவே நீதிமன்றமே குட்டியுள்ளது. கொரோனா மரணங்களில் பொய்க்கணக்கு எழுதியவர்கள் பரிசோதனைகளில் பொய்க்கதைகள் சொல்லாமல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.