உதயநிதி இ-பாஸ் வாங்கி சாத்தான்குளம் சென்றாரா?- கே.என்.நேரு சொல்லும் அரசியல் விளக்கம்

 

உதயநிதி இ-பாஸ் வாங்கி சாத்தான்குளம் சென்றாரா?- கே.என்.நேரு சொல்லும் அரசியல் விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்கி சாத்தான்குளம் சென்றாரா என்ற கேள்விக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி இ-பாஸ் வாங்கி சாத்தான்குளம் சென்றாரா?- கே.என்.நேரு சொல்லும் அரசியல் விளக்கம்

திருச்சியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்க. எத்தனை பேர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருகிறாங்க. எத்தனை பேர் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. திருச்சியில் அதிகமாக தொற்று பரவுகிறது என்று எனக்கு செய்தி வருகிறது. அதற்கான நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சென்று விளக்கம் கேட்டு என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி ஆட்சியரை சந்தித்தேன்.

அப்போது, திருச்சியில் ரயிலும், விமானங்களும் வரும் காரணத்தினால்தான் இந்த தொற்று அதிகமாக இருக்கிறது. 450 பேர் குணமடைந்து சென்றுவிட்டார்கள். 4 பேர்தான் இறந்திருக்காங்க. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கூறினார். இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை திருப்தியாக இல்லை. மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தொற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. இ-பாஸ் வாங்கித் தான் உதயநிதி சாத்தான்குளம் போனாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அரசாங்கம்தான் இ-பாஸ் கொடுக்கிறது. சும்மா அரசியலுக்காக இப்படி ஜெயக்குமார் பேசுகிறார். காவல்துறையினரை தாக்கிய அர்ச்சுனன் திமுக எம்பி என்று போடுறாங்க.

உதயநிதி இ-பாஸ் வாங்கி சாத்தான்குளம் சென்றாரா?- கே.என்.நேரு சொல்லும் அரசியல் விளக்கம்

அவர் திமுகவில் இருந்து அதிமுகவுக்குபோய், அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு போய். அமமுகவில் இருந்து தற்போது அதிமுகவுக்கு வந்திருக்கிறார். எம்ஜிஆர் கூட திமுகவில் இருந்தாரு. அவரை திமுகக்காரர் என்று சொல்லலாமா? என்று கேள்வி கேட்டேன். கொரோனா தீர்வதற்கு ஊரடங்குதான் தீர்வு என்று நினைக்கிறேன். கிராமங்களில் தொடர்ச்சியாக வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எந்தவிதமாக கொரோனா தொற்று இல்லை. நகரத்தில் அதிகமாக தொற்று பரவுகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்குதான் வழி. அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும். கூட்டம் நடக்கும்போது மாற்றுத் திட்டத்தை சொல்லுவோம்” என்றார்.