“ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நிற்போம் என்றோ கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள்” : ஜெ. அன்பழகன் மறைவுக்கு உதயநிதி இரங்கல்!

“ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நிற்போம் என்றோ கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள்” : ஜெ. அன்பழகன் மறைவுக்கு உதயநிதி இரங்கல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 62.

“ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நிற்போம் என்றோ கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள்” : ஜெ. அன்பழகன் மறைவுக்கு உதயநிதி இரங்கல்!

அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கட்சி பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு தருவதில் வல்லவர். கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

“ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நிற்போம் என்றோ கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள்” : ஜெ. அன்பழகன் மறைவுக்கு உதயநிதி இரங்கல்!

அவரின் இறப்புக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து ஜெ. அன்பழகன் உடல் முழு பாதுக்காப்புடன் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் அவரது தந்தை ஜெயராமன் கல்லறை அருகே புதைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “சிறைக்கு உள்ளே ஒருவர், வெளியே இன்னொருவர் என மிசா கைதால் அறிமுகமான இரு இளைஞர்கள். இணைந்து வளர்வோம் என்றோ, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நிற்போம் என்றோ கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள். அன்பு அண்ணனுக்கு அஞ்சலி. அவரின் உயிரை காக்க போராடிய அனைத்து உள்ளங்களுக்கும் அன்பும் நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.