நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

 

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நுழைவுத் தேர்வுகளளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கப்படவில்லை. மாணவர்கள் உட்பட அனைவரும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த வந்தனர். ஆனால் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த தேர்வுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டனர்.

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி 7 மாநிலங்கள் தொடர்ந்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் திமுக தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்திய படி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலினும், திமுக தொண்டர்களும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.