கூட்டணிக்கு அதிக சீட்டு கொடுக்க வேண்டாம் என தலைவரிடம் கூறிவிட்டேன் – உதயநிதி

 

கூட்டணிக்கு அதிக சீட்டு கொடுக்க வேண்டாம் என தலைவரிடம் கூறிவிட்டேன் – உதயநிதி

ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா தி.நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, “234 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும், எத்தனையோ விழா இருந்தாலும் பொங்கல் விழா தான் தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடி வருகிறோம், கலைஞர் நமக்கு வழிகாட்டிய படி சிறப்பாக கொண்டாட வேண்டும். 20 நாட்களில் 50 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டேன். அங்கெல்லாம் திமுக தொண்டர்களுக்கு நிறைய தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

கூட்டணிக்கு அதிக சீட்டு கொடுக்க வேண்டாம் என தலைவரிடம் கூறிவிட்டேன் – உதயநிதி

திமுக வெற்றி உறுதியாகிய தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்க வேண்டாம், திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் கூறினேன். தற்போதுள்ள சூழலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டால் 234 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். தி.நகர, மயிலாப்பூர் இரண்டு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என நான் உறுதி அளிக்கிறேன், தலைவரிடம் அனுமதி பெறாமல் இதை கூறுகிறேன். கொரோனா காலத்தில் 9 மாதங்களாக ரேஷன் கார்டுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தலைவர் கூறினார், ஆனால் அதை கேட்காமல் தேர்தல் சமயத்தில் வழங்குகிறார்கள்.

தலைவரிடம் உண்மையயை தீர்க்கமாக சொல்லும் ஒரு சிலரில் அன்பழகனும் ஒருவர். பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் கைது செய்யப்பட்டேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா போல எந்த தவறும் செய்து கைதாகவில்லை, மக்களுக்காக கைதானது பெருமையாக உள்ளது. ஒரே ஒரு குறை தான். இதை பார்க்க கலைஞர் இல்லையே என்பது தான் வருத்தம். தனது பெயரை காப்பாற்றிவிட்டான் என மகிழ்ந்திருப்பார் நான் வெறும் ட்ரெயிலர் தான் திமுக தலைவர் வரும்போது அதிமுகவினர் துண்ட காணும் துணிய காணும் என ஓடப்போகிறார்கள்” எனக் கூறினார்.