வைகோவிடம் பொட்டி பாம்பாய் அடங்கிய உதயநிதி – சாந்த சொரூபியாக மாறிய காட்சி!

 

வைகோவிடம் பொட்டி பாம்பாய் அடங்கிய உதயநிதி – சாந்த சொரூபியாக மாறிய காட்சி!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி அறிவிப்பு தான். ஏனென்றால் அங்கு போட்டியிட விருப்ப மனு அளித்தது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று தகவல் பரவிய நிலையில், ஸ்டாலின் அறிவிப்பு அதைத் தவிடுபொடியாக்கியது. ஒருவழியாக உதயநிதி அங்கு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Image

விஷயம் அதுவல்ல. கூட்டணிக் கட்சிகள் என்றாலே உதயநிதிக்கு வேப்பங்காயாய் கசக்கும். அவரைப் பொறுத்தளவில் 234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும். 2016 தேர்தலில் தோற்றபோது, திமுக தோற்றது கூட எனக்கு வலிக்கவில்லை; ஒரு கம்யுனிஸ்ட் எம்எல்ஏ கூட உள்ளே போகாதது தான் வருத்தமளிக்கிறது என்று கலைஞர் கருணாநிதி சொன்னார். அவர் குணத்தில் கொஞ்சம் கூட உதயநிதிக்கு கிடையாது என்பதே நிதர்சனம்.

இச்சூழலில் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்பட்ட பின் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதையடுத்து அண்ணாநகரிலுள்ள வைகோவின் இல்லத்திற்கு வண்டியைத் திருப்பியுள்ளார். தனது நண்பர் அன்பில் மகேஷையும் கூட்டிச் சென்றுள்ளார். இருவரும் வைகோவிற்கும் அவரது மகன் துரை வைகோவிற்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்திருக்கின்றனர். அதன் பின்பு இருவரும் வாழ்த்து பெற்றிருக்கின்றனர். நால்வரும் பரஸ்பரம் விசாரித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆவணி வந்தா டாப்புல வந்துருவான் என்ற பாணியில் எம்எல்ஏ ஆவதற்கு முன்பே பணிவுடன் நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி.