“அப்பாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்” – ஸ்டாலினுக்கே ஷாக் கொடுத்த உதயநிதி… ஏன் இந்த முடிவு?

 

“அப்பாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்” – ஸ்டாலினுக்கே ஷாக் கொடுத்த உதயநிதி… ஏன் இந்த முடிவு?

சில நாட்களுக்கு முன் அரசியல் களத்தில் பெரிய பேசுபொருளானது உதயநிதியின் தேர்தல் என்ட்ரி தான். திமுகவின் கோட்டைகளில் ஒன்றான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்ப மனு கொடுத்திருந்தார். அவர் சொன்னால் மறுபேச்சுக்கே இடமில்லாமல் அத்தொகுதி ஸ்டாலினால் டிக் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இச்சூழலில் “வரவிருக்கும் தேர்தலில் நான் எம்எல்ஏ ஆகுவது முக்கியமில்லை; அப்பா நீங்க முதல்வர் ஆகனும்; அதன் என்னோட லட்சியம், ஆசை, கனவு எல்லாம். அதனால நான் போட்டியிட போறதில்ல” என்று ஸ்டாலினிடமே நேராகச் சென்று போட்டு உடைத்துவிட்டாராம்.

“அப்பாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்” – ஸ்டாலினுக்கே ஷாக் கொடுத்த உதயநிதி… ஏன் இந்த முடிவு?

கூடவே தன்னைக் கரித்துக்கொட்டிய சீனியர் தலைவர்களுக்காகவும் கரிசனம் காட்டி பேசினாராம். “என்ன விட கட்சில நிறைய சீனியர்கள் கட்சிக்காக உழைச்சிருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு குடுங்க. நான் சாதாரண தொண்டனாவே இருந்துக்குறேன். உங்கள முதல்வராக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன். எம்எல்ஏ பதவி போனா போகுது” என்று கூறி ஸ்டாலினையே உருகவைத்துவிட்டாராம். ஸ்டாலினுக்கு முன்பே பிரச்சாரக் களத்தில் குதித்து பெருவாரியான இளைஞர்களைத் தன் பக்கம் இழுத்த உதயநிதியின் இந்த முடிவு சில நிர்வாகிகளிடையே குஷியையும் இன்னபிற நிர்வாகிகளிடையே சோகத்தையும் ஒருசேர எழுப்பியிருக்கிறதாம்.

“அப்பாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்” – ஸ்டாலினுக்கே ஷாக் கொடுத்த உதயநிதி… ஏன் இந்த முடிவு?

அதிமுக, பாஜக கட்சிகளில் வாரிசு அரசியல் இருந்தாலும், அதிகமாக வதைபடுவது என்னவோ திமுக தான். தேர்தல் பிரச்சாரத்தில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முக்கிய ஆயுதமாக பாஜகவும் சரி அதிமுகவும் சரி கையிலெடுக்கும். அப்படி எடுக்கும் பட்சத்தில் திமுக தரப்பில் சற்று பலம் குறையும். இதனால் ஸ்டாலின் முதல்வராவதும் கேள்விக்குறி ஆகிவிடும். இதையெல்லாம் கணக்குப் போட்டு பாஜக-அதிமுக திட்டத்தைச் சிதறடிக்கவே இம்முடிவை உதயநிதி எடுத்ததாகத் தெரிகிறது. யாருக்கு எப்படியோ உதயநிதியின் ரசிகர்களுக்கு இது சற்று துன்பியல் செய்தியாகவே அமைந்திருக்கிறதாம். இருந்தாலும் அதிகாரப்பூர்வமான ஒரு செய்தி வெளிவரவில்லை.