’மோனோ கேட்டவர் பெயரை மெட்ரோவுக்குச் சூட்டுவதா?’ உதயநிதி கேள்வி

 

’மோனோ கேட்டவர் பெயரை மெட்ரோவுக்குச் சூட்டுவதா?’ உதயநிதி கேள்வி

தமிழ்நாட்டின் தலைநகர் டிராஃபிக் ஜாம்க்கு பெயர் போனது. மெட்ரோ ரயில்களின் வருகை பலரின் போக்குவரத்தை எளிமையானதாக மாற்றி அமைத்து விட்டது. அண்ணாசாலையிலிருந்து கோயம்பேடுக்கு எத்தனை நிமிடங்களில் சென்றுவிட முடியும் என்பது பயணிகளின் கையில் இருந்தது.

’மோனோ கேட்டவர் பெயரை மெட்ரோவுக்குச் சூட்டுவதா?’ உதயநிதி கேள்வி

தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக, மெட்ரோ ரயில் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அவற்றிற்கு பெயர் சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ” அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையம் “புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்” என மாறியுள்ளது. மேலும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா cmbt என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

’மோனோ கேட்டவர் பெயரை மெட்ரோவுக்குச் சூட்டுவதா?’ உதயநிதி கேள்வி

மெட்ரோ ரயில்களை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்த கருணாநிதி பெயர் சூட்டப்பட வில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருந்தார். அவரைப் போல பலரும் இந்தப் புகாரை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ’கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.