கருணாநிதி போராடிய ரயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

கருணாநிதி போராடிய ரயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

திருச்சி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ரயில் மறியலில் ஈடுபட்ட கல்லக்குடி ரயில் நிலையத்தை, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

கருணாநிதி போராடிய ரயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை தொடங்கும் முன்பு, அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ரயில் மறியலில் ஈடுபட்ட கல்லக்குடி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

கருணாநிதி போராடிய ரயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தா கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரயில் நிலையத்தை முதன்முறையாக பார்ப்பதாகவும், இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இன்னும் இந்தி திணிப்பு தொடர்வதாக குற்றம்சாட்டிய அவர், தாங்கள் இந்தி மொழிக்கு எதிரி அல்ல என்றும், இந்தி திணிப்புக்கு தான் எதிரி என்றும் விளக்கம் அளித்தார்.