அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

 

அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிந்துஜா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 38வயதான சிந்துஜா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

இந்நிலையில் சிந்துஜா இறுதிச்சடங்கிற்கு உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கொரோனா கவச உடையை அணிந்து இறுதி சடங்கிற்கு வர அவருக்கு உதயநிதி ஆறுதல் கூறியுள்ளார்.

அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

அத்துடன் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜ் காமராஜ்அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.