கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா- துபாய் விமான சேவை ரத்து

 

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா- துபாய் விமான சேவை ரத்து

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் இந்தியா- துபாய் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா- துபாய் விமான சேவை ரத்து

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிவேகமாகவும் வீரியத்துடனும் பரவிவருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் இன்று ஒரேநாளில் 3,14, 835 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவையை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கும், பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கும் விமானங்கள் இனி இயக்கப்படாது.