தங்களுக்கு திருமணம் செய்து வைக்காமல், தான் மட்டும் இரண்டு திருமணம் செய்து கொண்ட கோபத்தில் சொந்த அக்காவையே கொலை செய்த தம்பிகளை கண்டு அனைவரும் அரண்டு போயுள்ளனர்.
அஹமதாபாத்தை சேர்ந்த சஜிஜுல் ஷேக் மற்றும் ரோஜோலி ஷேக் என்ற இரு சகோதர்கள் சௌக்கி என்ற தங்களின் திருமணமான சகோதரியை ஆகஸ்ட் 4ம் தேதி பார்க்க போனார்கள் .அப்போது தன்னுடைய தம்பிகளை பார்த்த அக்காவுக்கு ஒரே சந்தோஷம் .அதனால் தம்பிகள் கையில் ராக்கி கட்டிவிட்டார் .பிறகு இருவருக்கும் தேநீர் கொண்டு வருவதற்காக அவர் வீட்டுக்குள் போனார் .அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த தம்பதிகள் இருவரும் அக்கா கழுத்தில் கயிறு கட்டி அவரை நெரித்து கொலை செய்துள்ளனர் .பிறகு அவரின் வீட்டிலிருந்த 6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்று விட்டனர் .
இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சிசிடிவி காமெரா காட்சிகளை கொண்டு ஆய்வு நடத்தி, அன்று வீட்டுக்கு வந்த இரண்டு தம்பியையும் பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர்கள் தங்களின் சகோதரியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்டனர் .எதனால் அவர்கள் சொந்த அக்காவையே கொலை செய்யுமளவுக்கு போனார்கள் என்று விசாரித்த போது அவர்களுக்கு கல்யாணம் செய்யாமல் தங்களின் அக்கா இரண்டு திருமணம் செய்து கொண்ட கோபத்தில் இப்படி கொன்றதாக கூறினார்கள் ,போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.