#விடியல்_எப்போது_ஸ்டாலின் ! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

 

#விடியல்_எப்போது_ஸ்டாலின் ! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

திமுகவின் துரதிஷ்டவசமனோ என்னமோ ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே கொரோனா பரவல் வேகம் பன் மடங்கு அதிகரித்தது. தினசரி கொரோனா பாதிப்பு தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 32 ஆயிரத்தை தொட்டு விட்டது.

Image

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய அடுத்த நொடியே மருத்துமனைகளில் படுக்கை பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருத்துவர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பற்றாக்குறை லிஸ்ட் நீளமாக சென்றுகொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கூட்டம் இரவுப்பகலாக காத்திருக்கிறது.

ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தபோதும் இவ்வளவு பாதிப்பு இல்லை. ஆனால் தற்போது கொரோனா சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீட்டில் ஒருவரது உறவினரையாவது கொரோனாவுக்கு இரையாக்கிவிட்டு சோகத்தில் அமர்ந்துள்ளனர். திமுக அரசு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தாததும், சுகாதாரத்துறையை திறம்பட மேம்படுத்தாததுமே கொரோனா பரவலுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான திட்டமிடல் இன்மையும் கொரோனா போரில் தமிழகம் தோற்றதுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் வர்றாரு விடியல் தர போறாரு என விளம்பரப்படுத்தினீரே, #விடியல்எப்போதுஸ்டாலின் என நெட்டிசன்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.