டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு  முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அமுல் பிராண்ட் வாயிலாக பால் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த 55 ஆண்டுகளாக ஒரு சின்ன பெண் கார்ட்டூனை பயன்படுத்தி அமுல் தயாரிப்புகளை விளம்பரபடுத்தி வருகிறது. நாட்டில் நிகழும் சில முக்கியமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த விளம்பரங்கள் கருத்து உள்ளதாக இருக்கும்.

டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு  முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

அமுல் பிராண்ட்டுக்கு டிவிட்டரில் @Amul_Coop என்ற கணக்கு உள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த டிவிட்டர் கணக்கில், மேட் இன் இந்தியா பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், அமுல் சிறுமி டிராகனை வெளியே போ என சொல்வது போல் படத்தை அமுல் நிர்வாகம் வெளியிட்டது. இதனையடுத்து அந்த அமுல் கணக்கை டிவிட்டர் நிறுவனம் முடக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனாவுக்கு ஆதரவாக டிவிட்டர் செயல்படுவதாக நெட்டின்சன் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து டிவிட்டர் நிறுவனம் அந்த கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு  முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் இது குறித்து டிவிட்டரில், கணக்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். மேலும் ஒரு கணக்கு சமரசம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய சில நேரங்களில் கணக்கு உரிமையாளர் ஒரு எளிய reCAPTCHA செயல்முறையை முடிக்க வேண்டும். இது உண்மையான உரிமையாளர்களுக்கு எளிதானது அனால் தீங்கிழைக்கும் கணக்கு உரிமையாளர்களுக்கு இது கடினம். இந்த பாதுகாப்பு படிகளை அழித்தவுடன் கணக்கு முழு அணுகலை மீண்டும் பெறுகிறது. டிவிட்டர் கணக்குகளை பாதுகாக்க மற்றும் லாக்இன் சரிபார்ப்பிற்காக இந்த பாதுகாப்பு கீயை முடிக்க அவர்களை வழக்கமாக கோருகிறோம் என பதிவு செய்து இருந்தார்.