விதிகளுடன் உடன்பட ட்விட்டருக்கு 8 வாரம் கெடுவிதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

 

விதிகளுடன் உடன்பட ட்விட்டருக்கு 8 வாரம் கெடுவிதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது.

விதிகளுடன் உடன்பட ட்விட்டருக்கு 8 வாரம் கெடுவிதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின. ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. இப்போதே உடன்படாவிட்டால் சட்ட ரீதியான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தது. ஆனால் அப்போதும் ட்விட்டர் இசையவில்லை.

விதிகளுடன் உடன்பட ட்விட்டருக்கு 8 வாரம் கெடுவிதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

அதனால் Intermediary என்ற நெறிமுறைகளை ட்விட்டர் பின்பற்ற தவறியதால் அதற்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. ட்விட்டர் மீது யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இதற்கான அர்த்தம். இதற்குப் பின் பல்வேறு வழக்குகள் ட்விட்டர் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது.

விதிகளுடன் உடன்பட ட்விட்டருக்கு 8 வாரம் கெடுவிதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனம் மீது இந்தியாவைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா, ”குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வீர்கள்? எங்கள் நாட்டில் உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்குக் காலத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று ட்விட்டர் நினைத்தால், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது. நீங்கள் விதிகளுடன் உடன்பட்டே ஆக வேண்டும்” என்றார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்த ட்விட்டர்,”முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க எங்களுக்கு 8 வாரங்கள் தேவை. ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியாவைச் சேர்ந்த நபரை இடைக்காலத் தலைமை குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம். குறைதீர்ப்பு குறித்த முதல்கட்ட அறிக்கையை ஜூலை 11ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளது.